பொருளாதாரப் பின்னடைவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி செய்யும் இந்தியாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயனடையவுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்கள் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் 30 லட்சம் ரூபா நிதி அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிதி வழங்கும் திட்டம் தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்திய துணை தூதுவர் ஸ்ரீ சாய் முரளி உட்பட தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ். சற்குணராஜா, பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கிளிநொச்சி வளாகத்தை நிர்மாணப்பதற்கும், அது தொடர்பான மேம்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.