பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான லக்நாத் பீரிஸ் (வயது – 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அதிகமான மாத்திரைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து உடலில் பரவியதால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்