கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 110 மில்லியனுக்கும் அதிகம் மதிப்புள்ள குஷ் ரக போதைப்பொருள் அடங்கிய பயணப்பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பயணிகளால் கைவிடப்பட்ட பொருட்கள்
சேமிக்கப்படும் கிடங்கில், குறித்த போதைப்பொருள் அடங்கிய பயணப்பொதி கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பயணப்பொதி கடந்த மார்ச் 17 ஆம் திகதி தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த ஒரு பயணி விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பயணப்பொதியில் 11 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருள் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.