பப்பாளி பயன்கள்

பப்பாளி பயன்கள்

பப்பாளி பயன்கள்

🟠🟢பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகளைத் தவிர இதன் மென்மையான ஆரஞ்சு நிற சதைப்பற்று உண்பதற்கு உகந்தது. இது பலவிதமான சுகாதார நலன்களை நமக்கு வழங்குகிறது.

பப்பாளி பழத்தின் நன்மைகள்

🍐சர்க்கரை/நீரிழிவு பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.

🍐பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இந்த மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது. எனவே பெண்கள் பப்பாளி  சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

🍐பப்பாளி பழத்தில் விட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை சேதமடையாமல் தடுக்கின்றன. விட்டமின் A மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கிறது.

🍐தினமும் பப்பாளி சாப்பிடுவது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பப்பாளியில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது.

🍐சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் கூந்தல் வளர்ச்சிக்கும் பப்பாளி உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கூந்தலை மென்மையாக்கவும், பளபளப்பாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது

🍐பப்பாளி சாப்பிடுவது உங்களின் செரிமான சக்தியை மேம்படுத்தும். ஏனெனில் இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்திற்கு தேவையான நொதிகள் அதிகம் இருக்கிறது.

🍐பப்பாளியில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. அவை நமது தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும் பண்பு பப்பாளிக்கு உண்டு. இதனால் மாரடைப்பு அபாயம் நீங்கும்.

🍐கீழ்வாதம் என்பது நம்மை பலவீனப்படுத்தும் நோய். இது விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படுகிறது. பப்பாளியில் விட்டமின் சி உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால்இ எலும்புகளுக்கு வலு சேர்த்து நம்மை திடமாக்கும். உடலில் விட்டமின் சி குறைந்தால் மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே உங்களது உணவில் பப்பாளியை கட்டாயம் சேர்த்துக் கொள்ளவது அவசியமாகும்.

பப்பாளி பயன்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்