தாஜ்மஹாலுக்கு அருகே இளம்பெண்ணின் சடலம் மீட்பு

இந்தியாவின் ஆக்ராவின் தாஜ்மகால் அருகே இளம்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தாஜ்மகால் அருகே உள்ள மசூதிக்குள் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாணமாகவும், உடலில் காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார், விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்