ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் பயணித்த காரொன்று பத்தேகம அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 16 மற்றும் 21 வயதுடைய இரண்டு மகன்களும் வைத்தியர் மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது 21 வயது மகன் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.
காரில் சிக்கி காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்