பண்டைய பெண் கடவுள் சிலை கண்டுபிடிப்பு

பண்டைய பெண் கடவுளின் கற்சிலை ஒன்று காசா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்சிலை 4,500 ஆண்டுகளுக்கு முன் வெண்கல யுகத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கனானித் தெய்வத்தின் தலை என்று பலஸ்தீன தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

22 செ.மீ உயரம் கொண்ட இந்த பெண் தெய்வத்தின் சிலையின் தலையில் பாம்புக் கிரீடம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இந்த அனாத் சிலை பெரிதும் அறியப்பட்ட கனானித் தெய்வமாகும். இது தற்போது காசாவில் இருக்கும் ஒருசில அருங்காட்சியங்களில் ஒன்றாக செயல்படும் கஸ்ர் அல் பஷாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.