கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் மூழ்கி காணாமல் போனவர், இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மூவர் நீராடிய நிலையில், ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.
அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்ற நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீன்பிடி மீனவர்களினால் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டது.
சம்பவத்தில், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.