-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் நேற்று புதன்கிழமை தச்சுவேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பட்டறையின் வாள் வெட்டி உயிரிழந்துள்ளார்.
ஏழாலை மத்தி, ஏழாலை பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வேலைத்தலத்தில் வேலைசெய்துகொண்டு இருந்தவேளை திடீரென அவரது நெஞ்சில் தச்சு பட்டறையின் வாள் வெட்டி படுகாயம் ஏற்பட்டது.
இதனால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் பலத்த காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்