சபாநாயகர் அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றின் மூலமே இன்று வெள்ளிக்கிழமை அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும், சபாநாயகர் குறித்த விடயத்திற்கு பதிலளிக்கத் தவறினால், தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
