இரத்தினபுரி – எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவின் ஹல்மில்லகெட்டிய பகுதியில் உள்ள வீட்டில் நேற்று வியாழக்கிழமை இரவு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணித்தவர் தனது மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து 8 வருடங்களாக வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் குறித்த வீட்டின் படுக்கையறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ள நிலையில் இது கொலையா என்பதை அறிய எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.