-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரகலை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள பொது மலசலகூடம் செல்லும் வழியில் கீழே அமர்ந்தவாறு இறந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இரத்தினபுரி கரப்பிஞ்ச பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.