அரேபிய கடலில் படகு கவிழ்ந்ததில் 12 பாகிஸ்தான் மீனவர்கள் உயிரிழந்ததாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தெற்கு, சிந்து மாகாணத்தில் கடந்த 5ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் காணாமல் போயிருந்தனர்.
இந்தநிலையில் தொடர்ச்சியாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் 12 மீனவர்களின் சடலங்களை மீட்டுள்ளனதாக இராணுவ மக்கள் தொடர்பு பிரிவு நேற்று புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் காணாமல் போயுள்ள மேலும் 2 மீனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.