யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.
இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்