பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க, கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் வீரர் ஒருவரை அறைந்த குற்றச்சாட்டின் பேரில் அவரை ஒழுக்காற்று அடிப்படையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.
அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரை சேவையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2025 செம்பியன் கிண்ணம் வரை இடைக்கால பயிற்சியாளராக இருப்பார் என பங்களாதேஷ் கிரிக்கெட் அறிவித்துள்ளது.