-யாழ் நிருபர்-
கதிரையில் அமர்ந்திருந்து உணவு அருந்திய குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் ஞாயிற்று கிழமை உயிரிழந்துள்ளார்.
காரைநகர் – விக்காவில் பகுதியைச் சேர்ந்த மயில்வாகனம் ஐங்கரன் (வயது – 41) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் இன்றையதினம் வர்ணம் பூசும் வேலை செய்துவிட்டு மதிய உணவு அருந்திக்கொண்டு இருந்தவேளை விக்கல் ஏற்பட்டு, மயக்கம் ஏற்பட்டது.
இதன்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.