நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 129ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும் தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலச்சரிவு காரணமாக நேபாளம் முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன.
கன மழை மற்றும் அதிக காற்று காரணமாக மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.