இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் நெடுநாள் மீன்பிடிப்படகொன்றில் இருந்து 40 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது ஐந்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதான ஐந்து சந்தேக நபர்களும் நெடுநாள் மீன்பிடி படகும் தற்போது கடற்படையினரால் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.