ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான வசந்த கால நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை காலை நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும் கோலாகாலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
வழக்கம் போல் நுவரெலியா நகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேன்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடன் இந்த வசந்த கால நிகழ்வுகள் ஆரம்பமாகின.
நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் இம்மாதம் முழுவதும் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள் போட்டிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே சிறப்பு முதன்மை அதிதியாக கலந்து கொண்டதோடு, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலகொட, பிரதேச செயலாளர், உதவி செயலாளர், பொலிஸ் அத்தியட்சகர்கள், முன்னாள் மாநகர சபை முதல்வர் மஹிந்த தொடபேகம மற்றும் சந்தணலால் கருணாரத்ன நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், இராணுவ அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், சுகாதார மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இன்று தொடக்கம் இம்மாதம் 30 ஆம் திகதி வரை வசந்தகால கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன.