முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் நீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்தது.
முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை தாயுடன், நீராடுவதற்காக அவர்களின் வீட்டில் உள்ள குளியலறைக்குச் சென்றிருந்தபோது, நீர் நிறம்பிய பாத்திரத்தினுள் மூழ்கிய நிலையில் மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக நடவக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.