-மூதூர் நிருபர்-
ஆவணமின்றி , நிறமாற்றி ஓடப்பட்ட மோட்டார் சைக்கிளை அரச உடமையாக்கி , சாரதிக்கு 108000 ரூபாய் அபராதம் விதித்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி வஸீம் அஹமட் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளார்.
திருகோணமலை -சம்பூர் போக்குவரத்து பொலிஸார் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளை இடைமறித்து ஆவணங்களை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளானது பதிவுப் புத்தகத்தில் இருக்கின்ற நிறத்துக்கு மாறாக வேறு வர்ணம் பூசப்பட்டமை ,மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்கள் இல்லாமை ,மின்குமிழ் ஒளிராமை,பிரேக் இல்லைமை பல குற்றங்களை கண்டறிந்து மூதூர் நீதிமன்றத்தில் சம்பூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கானது மூதூர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டபோதே மூதூர் நீதிவான் மோட்டார் சைக்கிளை அரச உடமையாக்கி,அபராதம் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.