நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் கிழங்குக்கடைகள் (டேஸ்ட்) கடைகளில் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது
இந்நடவடிக்கையில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம் றயீஸ் அவர்களின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.எம்.எம். பைசால் , பொதுச்சுகாதார பரிசோதகர், அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் டெங்கு களத்தடுப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகள், உணவுகளை கையாளுவதற்கு பொருத்தமற்ற உபகரணங்கள் மற்றும் பழைய எண்ணெய்கள் என்பன கைப்பற்றப்பட்டது.




