பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் என்ற போர்வையில் 2,500-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சுமார் 4 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனமொன்றின் மற்றுமொரு பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாரிய நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக, வணிகக் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2 நிறுவனங்கள் பெருந்தோட்ட முதலீட்டுத் திட்டங்கள் ஊடாக முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிறுவனங்களுடன் தொடர்புடைய மேலும் இரு பணிப்பாளர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.










