மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை களனி கங்கை, களு கங்கை , கிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 22 கடற்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.