2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைய தினம் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பரீட்சை அடுத்த மாதம் 20 ஆம் திகதி வரை 2 ஆயிரத்து 312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.