-மூதூர் நிருபர் –
பெய்துவரும் கனமழை காரணமாக மூதூர் – கட்டைபறிச்சான் இறால் பாலத்தை ஊடறுத்து நான்காவது நாளாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.
இதேவேளை கடந்த மூன்று நாட்களையும் விட இன்றையதினம் நீர் பிரவாகம் அதிகரித்துள்ளதையும் காணமுடிகிறது.
இதனால் இவ்விதீ ஊடாக பிரயாணம் செய்யும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களுக்கு மத்தியில் பிரயாணத்தை மேற்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.