நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் கிளர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது

தேர்தல்களை பிற்போடுவற்கான காய் நகர்த்தல்களை அரசு மேற்கொள்கிறது என்னும் சந்தேகம் வலுக்கிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

நடத்த வேண்டிய உள்ளூராட்சி, மாகாண சபைகள் காலவரையறையற்று பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலையும் பிற்போட வியூகம் அமைக்கப்படுகிறது.

அரகலயப் போராட்டம் போல் மீண்டும் நாடுதழுவிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுவதாக உணர்கிறோம்.

தமிழ் பொது வேட்பாளர் அவசியம் பற்றி சுமந்திரன் உணரவேண்டும் அதைவிடுத்து அது தேவையற்றது என்று கூறுவது நியாயமற்ற பேச்சு, என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்