நாட்டில் பயிற்றுவிக்கப்படும் 100 தாதியர்களில் 30 தொடக்கம் 40 பேர் வரை நாட்டை விட்டுச் செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலை தொடர்வது சிறந்த விடயமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உலகின் உயர்வான சுகாதார சேவையை கொண்டிருக்கும் எமது நாட்டின் சுகாதார துறையை மேம்படுத்தி அதனை பொருளாதார வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
வைத்திய மற்றும் தாதியர் சேவைக்காக பயிற்றுவிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.