தற்போது காணப்படும் வெப்பமான நிலைமை மார்ச் மாதம் வரை அதிகமாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அது 36 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியது.
எவ்வாறாயினும், மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தவிர மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.