நாட்டில் டிசம்பர் 2022 நிலவரப்படி சுமார் 50,000 விவாகரத்து வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 48,391 விவாகரத்து வழக்குகள் 2022 டிசம்பர் 31 வரை நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தநிலையில் , இலங்கை போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு இது ஒரு பெரிய எண்ணிக்கையிலான வழக்குகளாக கருதப்படுகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.