நாட்டில் இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோ கோழி இறைச்சி 1,150 ரூபாவாகவும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 1,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3,300 ரூபாவாகவும், மாட்டிறைச்சி 2,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பேலியகொட பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் எச்.டி.என்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.