நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கைக்கு கிழக்காக உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களில் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

மேலும் மத்திய,சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.