இலங்கையின் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சமூகப் பிரச்சினைகள் மற்றும் தொண்டு முயற்சிகளில் மனமு யூடியூப் தளத்தில் கவனம் செலுத்தும் அவரை லட்சக்கணக்கானோர் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது ஒரு ட்ரெண்டாக இருக்கிறது.
சமீபத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சைப்ரஸ் நாட்டு யூடியூபர் ஃபிடியாஸ் பனாயோடோ அதற்கு ஒரு உதாரணம்.
அரசியல் அனுபவம் இல்லாத போதிலும் ஃபிடியாஸ் 19.4 வீதமான வாக்குகளைப் பெற்று மூன்றாவது அதிக வாக்குகளைப் பெற்றார். 2.6 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டிருந்த ஃபிடியாஸ் பனாயோடோ தற்போது இலங்கையின் பிரபல யூடியூபரான அஷேன் சேனாரத்னவுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கலாம் என பலர் தெரிவிக்கின்றனர.
இதேவேளை அஷேன் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைக்கும் போது ஐரோப்பாவில் ஃபிடியாஸ் பனையோடோவின் வெற்றியை போன்று இலங்கையின் அரசியல்பரப்பில் அஷேனின் வெற்றி சாத்தியமானதா என்று பலர் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.