நன்கொடையாக மருந்துவ பொருட்களுடன் மண்ணெண்ணெய் வழங்கியது இந்தியா

இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை பதில் இந்திய உயர்ஸ்தானிகர் வினோத்கேஜேக்கப் , சுகாதார அமைச்சர் கெஹலியரம்புக் வெல்லவிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு விடுத்தள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

25 தொன்களுக்கும் அதிக நிறையுடைய இத்தொகுதியானது கிட்டத்தட்ட 260 மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியுடைய தென மதிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக சந்த்ரகுப்தாவும் இதன்போது கலந்துக்கொண்டார்.

இதனை துரிதமாக விநியோகிப்பதற்காக இந்திய கடற்படைக்குச் சொந்தமானதும் நேரடியாக தரையிறங்கல் வசதியுடையதுமான, 5600 தொன்நிறை கொண்ட கரியால் கப்பலானதுசாகர் IX பணியின் ஓர் அங்கமாக சேவையில் அமர்த்தப்பட்டிருந்தது.

மருத்துவப்பொருட்களுக்கு மேலதிகமாக இலங்கை மீனவர்களின் பயன்பாட்டுக்காக மண்ணெய்யும் இக்கப்பல் மூலமாக தருவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் நாட்களில் இலங்கை மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனம் ஊடாக இந்த மண்ணெய் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

ஊடகப்பிரிவு