-பதுளை நிருபர்-
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று புதன்கிழமை பயணித்த ரயிலில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு அருகில் குறித்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது
பண்டாரவளை பெரேரா மாவத்தையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் பின்னர் அவரது சடலம் அதே ரயிலில் பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக பண்டாரவளை புகையிரத நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்