2026 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு போட்டிகளில் கைப்பந்து (Volleyball) போட்டி கடந்த 23 அக்டோபர், பனகோடா இராணுவ உள்ளரங்க விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
இந்த தொடரில் இலங்கை விமானப்படை மகளிர் அணி தொடர்ச்சியாக 07வது முறையாக மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாதுகாப்புப் சேவை விளையாட்டுப் போட்டிகளில் கைப்பந்து அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு பாதுகாப்பு சேவா போட்டியிலும் தோல்வியடையாத ஒரு அணியாக விமானப்படை மகளிர் அணி இருந்து வருகிறது.

வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பனகோடா இராணுவ உள்ளரங்க விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இராணுவ கைப்பந்து சம்மேளன தலைவர் மேஜர் ஜெனரல் ரோகன் மெதகொட பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மேலும், எயார் கொமடோர் உதித பியசேன மற்றும் இலங்கை விமானப்படை கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் எயார் கொமடோர் புத்திக பியசிறி, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் மற்றும் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.











