அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி, நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை நிலையாகக் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தகவலின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விகிதம் 327.79 ரூபாவிலிருந்து 327.77 ரூபாவாகச் சிறிய மாற்றத்தைக் கண்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 336.81 ரூபாவாக மாற்றமின்றிக் காணப்படுகிறது.
இதற்கிடையில், வளைகுடா நாடுகளின் நாணயங்கள் உள்ளிட்ட ஏனைய நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











