இலங்கை அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையேயான 3 ஆவது ஒருநாள் கிரிக்கட் போட்டி ஜமைக்கா, கிங்ஸ்டன், சபீனா பார்க் மைதானத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அதன்படி, இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி நாளை அதிகாலை ஒரு மணிக்கு ஆரம்பமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில், இலங்கை அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னணிலையில் உள்ளது.
முதலாவது போட்டியில், இலங்கை அணி 41 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்தது.
இரண்டாவது போட்டி காலநிலை சீர்கேடு காரணமாக கைவிடப்பட்டது