எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் நேற்று சனிக்கிழமை நுவரெலியாவில் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடர்பான அறிவிப்பை நாளைய தினம் திங்கட்கிழமை வெளியிடுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.