-மஸ்கெலியா நிருபர்-
தேயிலை கொழுந்து அரைத்து கொண்டு இருந்த இயந்திரத்தில் தவறி விழுந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள மவுசாகலை பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று புதன்கிழமை அதிகாலை 2.10 க்கு இடம் பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிட்ண்ணன் விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவிக்கையில் இறந்தவரின் உடலம் சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி மற்றும் ஹட்டன் நீதிமன்ற நீதிபதி வந்து பார்த்த பின்னர் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
