தெற்கு அதிவேக வீதியில் 199.3 கிலோமீற்றர் மைல்கல் அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு நோக்கிப் பயணித்த கார் மற்றுமொரு காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில், நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் லுணுகம்வெஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, தெற்கு அதிவேக வீதியிலிருந்த பாதுகாப்பு வேலி மற்றும் மின் கம்பம் ஆகியவற்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.