தெற்கு அதிவேக வீதியில் 64.7 கிலோ மீற்றர் மைல் கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இருவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியில் ஐந்து பேர் பயணித்துள்ள நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்