துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

பொலன்னறுவையில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேவாகம பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலன்னறுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதில் காயமடைந்த நபர், குரங்குகளை விரட்ட உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துச் சென்றபோது, ​​தடுமாறி துப்பாக்கி வெடித்துள்ளதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் காயம் அடைந்தவர் தொழில் கடன் காரணமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்