கம்பஹா பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் துப்பாக்கியால் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
ஷனாராம மகா விகாரையில் சேவையாற்றி வந்த தம்ம ரத்தன (வயது – 45) என்ற தேரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காரில் வந்த 4 சந்தேகநபர்கள் ரி56 வகை துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதுடன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த தேரர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தேரர் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.