கொழும்பு – முகத்துவாரம் ரெட்பானா வத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
23 வயதான இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜீன் மாதம் தொடங்கியதிலிருந்து நாட்டில் பதிவான 5வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
03.06.2022- பானந்துறை துப்பாக்கிச்சூடு – 31 வயதான நபர் பலி
03.06.2022- அளுத்கம துப்பாக்கிச்சூடு – 42 வயதானவர் பலி
05.06.2022- தங்காளை துப்பாக்கிச் சூடு – 37 வயதான நபர் பலி
05.06.2022- அஹங்கம துப்பாக்கிச் சூடு – 27 வயதான நபர் பலி