குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா துப்பாக்கிக்குப் பூஜை செய்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, கடந்த 2019ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ரிவாபா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை 50,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
குஜராத் சட்டமன்ற தேர்தலில் தனது மனைவிக்கு ஆதரவாக ரவீந்திர ஜடேஜா பிரசாரம் செய்தார்.
சமீபத்தில் சர்வதேச T20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவீந்திர ஜடேஜா, பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற விஜயதசமி பூஜையில், ரிவாபா ஜடேஜா துப்பாக்கியை வைத்துப் பூஜை செய்தார்.
ஜாம்நகரில் விமர்சையாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ரிவாபா ஜடேஜா, பயபக்தியோடு துப்பாக்கிக்கு மலர் வைத்துப் பூஜை செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.