யாழ்ப்பாணம் வரணி பகுதியில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த ரதீஸ்வரன் லஜி (வயது – 19) என்ற இளம் பெண்ணே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.