– திருக்கோவில் நிருபர் கி.மிதுர்ஷன்-
திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வுக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்குமாறு கோரி திருக்கோவில் பிரதேச மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேச சபைக்கு இன்று புதன்கிழமை வருகை தந்த இல்மனைட் அகழ்வு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்னர்.
இதனைத்தொடர்ந்து குறித்த அதிகாரிகளுடன் பிரதேச இளைஞர்கள் கலந்துரையாடி இவ் அகழ்வு நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இதனால் எதிர்வரும் காலங்களில் முகம்கொடுக்கவிருக்கும் பிரச்சனைகள் பற்றியும் அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிய இளைஞர்கள் , குறித்த இல்மனைட் அகழ்வு தடுத்து நிறுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.