-மூதூர் நிருபர்-
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பில் 12 மணி வரை திருகோணமலை மாவட்டத்தில் 51.07 வீதமான வாக்குப்பதிவு இடம் பெற்றுள்ளது.
மூதூர் தேர்தல் தொகுதியில் 54.02 வீதமும், சேருவில தேர்தல் தொகுதியில் 55.09 வீதமும் திருகோணமலை தொகுதியில் 45.06 வீதம் வாக்குப்பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக – 51.07 வீதமான வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.