-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாவிலாறு யுத்தத்தின்போது இந்த மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.
மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
நீதிமன்ற அனுமதியைப் பெற்று இம்மிதிவெடி மீட்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.